Writer Space

நூல் அறிமுகம்: ஒரு பெண்ணின் கதை – நா.விஜயன்

நூல் அறிமுகம்: ஒரு பெண்ணின் கதை – நா.விஜயன்

ஒரு பெண்ணின் கதை பிரபல தெலுங்கு எழுத்தாளரான ஓல்கா அவர்கள் எழுதிய நாவல்

பெண் எழுத்தாளர் என்றாலே பெரும்பாலும் பெண்ணியம் பற்றிய எழுதியிருக்கக்கூடும் என்று எண்ணுவோர் மத்தியில் அதை உடைத்தெறியும் நாவல்.

பெண்ணியம் மட்டுமல்லாமல் பெண்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அவர்கள் சமூகத்தில் ஒரு கட்டமைப்புக்குள் வாழ்வதைப் பற்றியும் வாழ்வியல் சார்ந்த ஏற்படக்கூடிய பிரச்சினைகளைப் பற்றியும் எப்பொழுதும் ஆண்களை சார்ந்து இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை இந்த சமூக கட்டமைப்பும் பல ஆண்டுகளாக செய்திருப்பதை மிகவும் எளிமையாக எடுத்துரைக்கிறது பெண்ணின் கதை.

இதில் ஒரு பெண்ணின் கதை தலைப்போடு துவங்கும் முதல் கதையில் ஒரு பெண்ணின் மனக் குமுறலை மிகவும் எளிமையாக எடுத்துக்கூறுகிறார். திருமணமான சில நாட்களிலேயே தனது கணவனுக்கு நிறுவனத்தில் பணிபுரியும் போது ஏற்படும் விபத்தில் ஏற்படும் காயங்களும் அவர் கைகளில் இருந்து விரல்கள் துண்டிக்கப்பட்டது. அவரை ஏற்பட்ட மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் மத்தியில் இந்தப் பெண் அவருக்கு ஆதரவாக எப்பொழுதும் நான் இருப்பேன் என்று துணையாக இருந்தது. அதே நேரத்தில் அவர் நிறுவனத்தில் இருந்து வந்து யூனியனை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறியது. அவருடைய வேலையையும் நிறுவனத்திடம் பேசி இழப்பீடும் பெற்றுக்கொடுத்தது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

சிறிது காலங்கள் கழிந்தவுடன் இயல்பு நிலைக்கு வந்த பிறகு ஒரு விபத்தில் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பெரும் திறனை இழந்து விடுகிறாள். அந்தச் சூழ்நிலையில் கணவரும் அவரது தாயாரும் இணைந்துகொண்டு குழந்தை பெற முடியாதவள் என்று ஏளனம் செய்வதும் கணவரே தன்னை அருவருக்கத்தக்க ஆளாக பார்ப்பதும் ஒரு மிகப் பெரிய மன உளைச்சலை அவளுக்கு தருகிறது.

அவருக்கு விபத்து ஏற்பட்டு தான் எவ்வளவு ஆதரவாக இருந்தோமோ அந்த அளவுக்கு இல்லை என்றாலும் குறைந்தபட்சம் அன்பும் ஆதரவும் கூட கிடைக்கப்பெறாத நிர்கதியாக அவள் நிற்பதை கண்ணீர் மல்க எடுத்துரைக்கிறார்.

அவள் மனதில் அவர் விபத்தில் பாதிக்கப்பட்ட பொழுது அவருக்காக துணை நிற்கும் யூனியன் வந்தது. நான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி நிர்கதியாக நிற்கின்ற நிலையில் எனக்காக வருவது யார் என்று அவள் எண்ணும் பொழுது நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

பரிசோதனை

யார் அவள், சுனந்தா எங்கிருந்து வந்தாள் அவள் எப்படிப்பட்டவள் எல்லோரிடமும் இருந்து அவள் வித்தியாசமாக இருக்கிறாள். ஆம், வித்தியாசம்தான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவிலும் தீர்க்கமாக தெளிவாகவும் சுய கௌரவத்துடனும் மிகவும் சுதந்திரமாக செயல்படக்கூடிய பெண்ணாக தனது விருப்பத்திற்கு மாறாக வீட்டில் திருமணம் செய்ய முடிவு எடுத்த பொழுது வீட்டை விட்டு வெளியேறி வேலை செய்துகொண்டு படித்திருக்கிறாள். நாம் யோசிக்கும் சாதாரண பெண்ணாக இல்லை அவள். நாம் யோசிக்கும் கோணங்களிலிருந்து இல்லாமல் மாற்றாக இச்சமூகத்தின் கட்டமைப்புகளை உடையவர்களாக அதை முழுமையாக உணர்ந்தவளாக சமூகம் கற்பிக்கும் கற்பு பலவீனம் இயலாமை சார்ந்திருப்பது என எல்லாவற்றையும் உடைத்து இந்த ஆணாதிக்க சமூகத்தில் தனித்து சுய கௌரவத்துடன் சுதந்திரமாக தனக்கு பிடித்தாற்போல் வாழ்கிறாள்…

இறுதியாக நரேந்திரனுக்கு அவள் எழுதிய கடிதம் ஆணாகப் பிறந்த ஒவ்வொருவரின் மனதையும் உலுக்கி விட்டு செல்கிறது..

இன்னும் இந்த நூல்களின் சமூகம் கற்பிக்கும் மாமியார் மருமகள் பற்றியும் பெண்களின் உளவியல் ரீதியான பிரச்சினைகளை பற்றியும் மிகவும் நன்றாக எடுத்து வைக்கிறார் எழுத்தாளர் ஓல்கா.

இறுதியாக இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்து அனைவரும் வாசிக்கும் வகையில் கொடுத்த மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி

ஒரு பெண்ணின் கதை

எழுத்தாளர் : ஓல்கா

மொழிபெயர்ப்பாளர் : கௌரி கிருபானந்தன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *