அம்பையின் 13 கதைகளின் தொகுப்பு நூல் இது. மகள் மீதான தந்தையின் வாஞ்சையும், தந்தை மீதான மகளின் தீராத ஈர்ப்பும் குறித்த கதையுடன் துவங்குகிறது நூல்.
உயிர்ப்பின் தருணங்களில் நிகழ்ந்துவிடும் புறக்கணிப்புகளும், சலிப்புகளும் திரும்பிவர சாத்தியமற்ற நிலைக்கு சென்றுவிட்டதும், வலியாக, ஏக்கமாக, நினைவுகளாக, தொடரும் வாழ்வில் நிலைத்து விடுகின்றன.
நகரங்கள் குறித்து எத்தனை கோணங்களில் குறைகளை அடுக்கினாலும் சாதி பேதம் வெளிப்படையாகத் தெரியாத, வாழ்வாதாரத்தை உறுதி செய்யக்கூடிய தளங்களாக பெருநகரங்கள்தான் விளங்குகின்றன.
‘சாம்பல் மேல் எழும் நகரம்’ மும்பையின் நம்ப முடியாத மீட்சியைப் பேசுகிறது

Reviews
Clear filtersThere are no reviews yet.