“தந்தையே, நீங்கள் பொக்கிஷமாய் மதிக்கிற நாவுக்கரசரைக் காப்பாற்றியவர் இந்தப் பரஞ்சோதி. இவருக்கு நாம் உயர்ந்த பரிசளித்து கௌரவிக்கவேண்டும்… எனக்கொரு யோசனை வருகிறது…”என்ற நரசிம்மபல்லவர் மன்னரைப் பார்த்தார்.
“என்ன யோசனை. சொல் நரசிம்மா.”
“நமது சேனாதிபதி கலிப்பகையாருக்கும் முதுமையால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறதென்று வருத்தப்பட்டாரில்லையா.இந்த பரஞ்சோதியை நமது புதிய சேனாதிபதியாக நியமித்துவிடலாமே?…அதற்குரிய எல்லா தகுதிகளும் இவரிடம் இருக்கின்றன!”
“நல்ல யோசனை நரசிம்மா.. எனக்கும் இந்த எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது!” என்றார் மன்னர் மகேந்திரபல்லவர்.”எனக்குள்ளும் அந்த ஆசை இருந்தது மன்னா.”-கலிப்பகையாரும் அதை வழிமொழிந்தார்.”மன்னா. எனக்கு அந்த அளவுக்குத் தகுதி இல்லை…அது தவிர என் தாயாருக்கும் நான் சிறந்த கல்விமானாக வரவேண்டும் என்றுதான் ஆசை… அதற்காகவே என்னைக் காஞ்சிக் கடிகைக்கு அனுப்பினார்கள்!”-என்றான் பரஞ்சோதி.
“அதுபற்றி நீ கவலைகொள்ளத் தேவையில்லை பரஞ்சோதி… கடிகையின் ஆசான்களை மாலைவேளைகளில் அரண்மனைக்கு வரவழைத்து உனக்குக் கல்வி கற்பிக்கச் செய்கிறேன்.கலிப்பகையார் இன்றுமுதல் ராஜ்ய விஸ்தீரணங்களையும், நமது ராஜ – பரிபாலனங்களையும் உனக்கு அறிமுகம் செய்வார்… இளம்பரிதியை நீ துணையாக வைத்துக்கொள்… நல்லது செய்யநாள்-நட்சத்திரம் தேவையில்லை.. இந்தக் கணம் முதலே நீ பல்லவ சேனாதிபதி..!”-என்றார் மகேந்திரபல்லவர்.
கலிப்பகையார் தனது உடைவாளை எடுத்து மன்னரிடம் கொடுத்தார்.பரஞ்சோதி. தன் இடது முழங்காலைப் பூமியில் ஊன்றி. மன்னரின் திருக்கரங்களில் இருந்து வாளைப் பெற்றுக் கொண்டு பணிந்து வணங்கினான்.”சேனாதிபதி பரஞ்சோதி வாழ்க!”, என்ற முழக்கத்தில் அரண்மனை அதிர்ந்தது..!
-பட்டுக்கோட்டை ராஜா

Reviews
Clear filtersThere are no reviews yet.