செழியன்
திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர்.
கணையாழியின் சிறந்த சிறுகதை விருது. (2003) சிறந்த சிறுகதைக்காக ‘கதா விருது (2004) சிறுகதையில் காட்சிப்படிமங்கள் என்ற ஆய்வுககாக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2004). பரதேசி படத்துக்காக இலண்டனிலும், (2013) டுலெட் படத்துக்காக இத்தாலியிலும் (2018) சர்வதேச அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது. டுலெட் படத்துக்காக கொல்கத்தா திரைப்படவிழாவில் சிறந்த இந்தியப் படத்துக்கான விருது. (2018) சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றவர்.
சத்யஜித் ரேயின் முதல் படமான பதேர் பாஞ்சாலி. கடைசிப் படமான அந்தக் திரைக்கதைகளின் மொழிபெயர்ப்பு, உலக சினிமா, பேசும் படம்,முகங்களின் திரைப்படம். ஒளியில் எழுதுதல், டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும், ஹார்மோனியம் சிறுகதைத் தொகுதி, ‘த மியூசிக் ஸ்கூல் என்ற பெயரில் மேற்கத்திய இசை குறித்த பத்துத் தொகை நூல்களின் ஆசிரியர், ‘த பிலிம் ஸ்கூல என்ற பெயரில் ஒரு பள்ளியைத் துவங்கி இன்டிபெண்டண்ட் சினிமாவுக்கான கலையையும் நுட்பங்களையும் சுற்றுத் தருபவர்.
ஆனந்த விகடனில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வந்த நாள் முதல்’ என்கிற இந்தக் காதல் கவிதைத் தொடரின் ஆசிரியர்.

Reviews
Clear filtersThere are no reviews yet.