ஆன்டன் செகாவ்

Author : ஆன்டன் செகாவ்

Publisher : மின்னங்காடி பதிப்பகம்

Language : தமிழ்

Category : சிறுகதைகள், குறுநாவல்கள்

ISBN : 9789392973796

Published on : 2025

Book Format : Paperback

180.00

Description

ஆன்டன் செக்காவைக் கொண்டாடுவோம் புத்தக ஆர்வலரான நண்பருக்குப் பரிசளிக்கச் சிறுகதைத் தொகுப்பினைத் தேடுபவரா நீங்கள் ? எவ்விதத் தயக்கமுமின்றிச் செக்காவின் கதைகளை நான் பரிந்துரைப்பேன். சிறுகதை எழுதும் ஆர்வமுடைய இளம் எழுத்தாளரா நீங்கள் ? அப்பொழுதும் ஆன்டன் செக்காவின் கதைகள் உங்களுக்குச் சில ஆலோசனைகளைக் கூறக்கூடும். மன இறுக்கத்தைக் குறைக்கவும், சக மனிதர்களுடன் உரையாடும்போது குதூகலத்தை அதிகரிக்கவும் செக்காவின் கதைகள் உங்களுக்குத் துணை நிற்கும். இத்தகைய ஆற்றல் படைத்த ஆன்டன் செக்காவ், ரஷ்ய இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்தவராவார். பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பலதரப்பட்ட வாசகர்களைக் கவர்ந்த அவருடைய சிறுகதைகள், பல இளம் எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்துள்ளன. தமிழ் எழுத்தாளர்களில் பலர், செக்காவின் எழுத்தால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் செக்காவின் படைப்புகளை ஆராதிப் பவர்களாகவும் இருந்தனர்/இருக்கின்றனர் என்பதே இதற்குச் சான்றாகும். உப்புச்சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த இந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை இவ்வளவு சுவாரசியமாக எந்த எழுத்தாளராலும் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் செக்காவ் தனக்கேயுரிய மாறுபட்டக் கோணத்தில் அணுகியிருப்பதை அவருடைய கதைகளில் அறியலாம். செக்காவின் கதையுலகில் உள்ள மனிதர்கள், நம்மைப் போல் சராசரியானவர்களாகத் தோன்றலாம். ஆனால், வெளியில் புலப்படாத மனித மனத்தின் நற்குணங்கள், பலவீனங்கள், கசடுகள், வன்மங்கள், ஏக்கங்கள், துயரங்கள், எதிர்பார்ப்புகள் எனப் பல்வேறு அம்சங்களைச் செக்காவ் விவரிப்பதுடன் மனிதனின் கீழ்மைப் பண்புகளுக்குக் காரணமான சமூகத்தை விமர்சிக்கவும் தயங்குவதில்லை. செக்காவின் கதைகளை வாசிப்பவர், ஏதாவது ஒரு கட்டத்தில் தனக்குள்ளாகவோ, தன்னை மீறி வாய்விட்டோ சிரித்துவிடுவர். ஏனெனில், செக்காவின் எள்ளல் நடையில், நகைச்சுவை இயல்பாகக் கலந்திருக்கும். தன் கருத்துக்களைத் தயக்கமின்றித் தெரிவிக்க அவருக்கு இந்த நகைச்சுவை உதவுகிறது. செக்காவ் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், அவரது படைப்புகள் நம்மை ஈர்க்கவும் அவற்றை நாம் கொண்டாடவும் முக்கியக் காரணமாக அமைபவை, அவற்றில் உள்ள எளிமையும் யதார்த்தமுமாகும். அவருடைய சிறுகதைகள் பல்வேறு கால கட்டங்களில் தமிழில் வெளிவந்துள்ளன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளக் கதைகளில் பெரும்பாலானவை, இதுவரை தமிழில் வெளிவராதனவாகும். செக்காவின் படைப்புகள் சிலவற்றில் பிரஞ்சுச் சொற்களும் காணப்படுகின்றன. எனவே, ஆங்கிலம் மட்டுமின்றி பிரஞ்சு மொழியாக்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்துத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இந்த மொழியாக்க நூல் வர ஊக்கமளித்ததோடு, அவ்வப்பொழுது நினைவூட்டி, துரிதப்படுத்தி ‘பின்னுரை’ என்னும் பெயரில் செக்காவின் புகழினைப் போற்றிச் சிறப்புச் செய்துள்ள தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா அவர்களுக்கு நன்றி.

Customer Reviews

0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “ஆன்டன் செகாவ்”

Your email address will not be published. Required fields are marked *