சினிமாத் துறையில், சாதிக்க விரும்புகிறவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் முன்மாதிரியாகத் திகழ்கிறார். பல இளைஞர்களுக்கு அவரது வெற்றி, நம்பிக்கை தருகிறது.
1986ஆம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவில் பிறந்த லோகேஷ் கனகராஜ், இன்று தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். 2017ஆம் ஆண்டு ‘மாநகரம்’ திரைப்படம் மூலமாக, இத்திரையுலகில் கால்பதித்த லோகேஷ் கனகராஜின் எழுத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இதற்கடுத்து 2021ல் மாஸ்டர். 2022ல் விக்ரம் என அடுத்தடுத்து பெரு வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.
கமர்ஷியல் வெற்றியும், பெருவாரியான மக்களாலும் கொண்டாடப்பட்ட இவரது படங்களின் திரைக்கதைகள், ஏற்கனவே ப்யூர் சினிமா பதிப்பகத்தால். திரைக்கதைப் புத்தகங்களாக வெளியிடப்பட்டு, வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2023-ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியாகி, அவ்வருடத்தின் சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்றான, ‘லியோ’, திரைப்படத்தின் திரைக்கதை, தற்போது ப்யூர் சினிமா பதிப்பகத்தால், புத்தகமாக வெளியிடப்படுகிறது.

Reviews
Clear filtersThere are no reviews yet.